தாய் மடி (Thaai Madi) - மரச்செக்கு எண்ணெய்

Business Lists Add to Favourites
0.00 (0 votes)
Added 11-07-2020 23:18:27

Description

மரச்செக்கு எண்ணெய் என்றால் என்ன?

  • செக்கு என்பது எண்ணெய் வித்துக்க்களில் (கடலை,தேங்காய், எள்ளு,ஆமணக்கு) இருந்து எண்ணெய் எடுக்கும் ஒரு கருவி. செக்கானது மரத்தலோ, கல்லாலோ செய்யபட்டிருக்கும். செக்கின் அடி மரம் வாகை மரத்தின் தண்டில் இருந்து தயாரிக்க படுகிறது ஆரம்ப காலத்தில் செக்கில் எண்ணெய் ஆட்ட மாடுகளை பயன்படுத்தி வந்தனர் தற்பொழுது மின்சாரம் அல்லது எரிபொருள் முலம் இயக்கபடுகிறது. பழைய கிரைண்டர் போன்ற அமைப்பின் நடுவில் வித்துகளை நசுக்கும்படியாக உலக்கை கொண்டு அதனுடன் நசுக்கப்பட்ட வித்துகளில் இருந்து வரும் எண்ணெய் வெளியேறும் படியாக ஒரு குழாய் போன்ற உபகரணம் பொருத்தப்பட்டு இருக்கும் செக்கில் நல்லெண்ணெய் ஆட்டுவதற்கும் சுத்தம் செய்த எள் கருப்பட்டி அல்லது நாட்டு சக்கரை (ஆட்டும் பொழுது ஏற்படும் வெப்பத்தை தணிக்க) சேர்த்து ஆட்டுவது வழக்கம் சிறிது சிறுதாக ஒரே வேகத்தில் மரத்திலான செக்குகளை சுழல வைப்பதின் முலம் எள்ளில் இருந்து எண்ணெய் சிறிது சிறிதாக வெளியேறும்.
  • மரசெக்கில் கருபட்டியுடன் சேர்த்து எள்ளை ஆட்டும் பொழுது அவ்வளவாக வெப்பம் ஏறாது. அப்படியே ஏறும் குறைந்த வெப்பத்தையும் கருப்பட்டி சரி செய்து ஒரு வெப்ப சமமாக்கள் இயற்பியல் தத்துவத்தை அங்கே செயல்படுத்துகிறது. இப்படி மரசெக்கில் ஆட்டி பிழிந்து எடுக்கப்படும் நல்லெண்ணைக்கு அபாரமான மனமும் குணமும் இருப்பது இயற்கை. இவ்வாறு ஆட்டப்படும் எண்ணையின் மனம், மருத்துவ குணம் சுவை இதெல்லாம் அலாதி தான்.
  • மரசெக்கு எண்ணெய் பார்ப்பதற்கு கொஞ்சம் நிறம் குறைவாக இருக்கும் ஆனால் நல்ல ருசியுடன் 6 மாதம் முதல் ஒரு வருட காலத்திற்கு கெட்டுபோகாமலும் இருக்கும் ஒரு முறை மரசெக்கு எண்ணெய் சாப்பிட்டால் அதன் ருசி கால கால காலத்திற்கும் மறக்காது. இந்த எண்ணெய்யில் சமைக்கும் உணவுகள் ஆரோக்கியத்தை கொடுக்கும் குழம்பு வறுவல் பொரியல் முறுக்கு அதிரசம் வடை என்று எல்லாவிதமான உணவு வகைகளையும் இந்த செக்கில் ஆட்டிய எண்ணெய்களில் சமைக்கலாம்.
  • வெறும் நிறங்களில் இல்லை வாழ்க்கை. பாரம்பரியம் மிக்க நம் முன்னோர் காட்டிய வாழ்வியல் முறைக்கு மாற்றுங்கள் மாறுங்கள் நாளை உங்கள் சந்ததியினரை நோய் நொடி இல்லாமல் விட்டு செல்லுங்கள்.

Location

Coimbatore, Tamil Nadu, India
78, இரத்தினகிரி சாலை, NR கல்யாண மண்டபம் அருகில், விளாங்குறிச்சி, 641035

Video

Advert details

Advert ID: 48
Displayed: 93
Expires: 11-07-2021 17:48:27

Comments

Rating

Price
Product state
Shipment

Users' reviews

Log-in to add review